அமெரிக்க அதிபருக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு 2-வது இடம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கான குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி 2-ம் இடத்திற்கு முந்தியிருக்கிறார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 2024-ல் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார். இதற்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் குடியரசு கட்சியினரிடையே தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்கா முழுவதும் பயணித்து குடியரசு கட்சியினரை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், விவேக் ராமசாமி குடியரசு கட்சியினரிடையே ஆதரவு மெல்ல அதிகரித்து வருவதாக சி.என்.என் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கருத்து கணிப்பின்படி டொனல்ட் டிரம்பிற்கு குடியரசு கட்சியின் 39% உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. விவேக் ராமசாமி தற்போதைய நிலையில் 13% ஆதரவுடன் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வம்சாவளி போட்டியாளரான நிக்கி ஹேலே 12% ஆதரவுடன் 3-வது இடத்திலும், நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிருஸ் கிறிஸ்டி 11% ஆதரவுடன் 4-வது இடத்திலும் உள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு