கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீரங்கத்தில் இன்றிரவு உறியடி உற்சவம்


திருச்சி: பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். அந்த வகையில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் பிரசித்தி பெற்றது. அதன்படி கிருஷ்ண ஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் திருமஞ்சனம், அலங்காரம் அமுது கண்டருளினார். இரண்டாம் நாளான இன்று(8ம் தேதி) காலை 7 மணிக்கு கிருஷ்ணர் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் கிருஷ்ணர் சுவாமி எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தடைந்தார். அப்போது வீடுகள் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் சுவாமிக்கு எண்ணெய் சமர்ப்பித்து தரிசனம் செய்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேர்கிறார். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு