சிறுநீர் கழிக்க சென்ற போது விபரீதம் பாம்பு கடித்த அரசு பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை: பொக்லைன் மூலம் முட்புதர்கள் அகற்றம்

திருத்தணி: அரசுப் பள்ளியில் சிறுநீர் கழித்து கொண்டிருந்தபோது மாணவனை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி அருகே மேல்முருகம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. எனவே பள்ளிக்கு சற்று தொலைவில் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ள கழிப்பிடம் அருகில் உள்ள முட்புதரில் மாணவர்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மாலை 3 மணி அளவில் அங்குள்ள முட்புதரில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் என்பவரது 2வது மகன் சபரி(9) முட்புதர் பகுதியில் மற்ற மாணவர்களுடன் செக்று சிறுநீர் கழித்து கொண்டிருந்தபோது சபரியை 4 அடி நீலம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று கடித்தது. இதனால் மாணவன் அலறி அடித்து கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிராம பொதுமக்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், சிறுவனை மீட்டு திருத்தணி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் கழிப்பிட வசதி, சுற்றுச்சூவர் இல்லாததாலும் பள்ளியில் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதாக மாணவர்கள் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

பள்ளி மாணவனை பாம்பு கடித்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளியில் சுற்றுப்புறத்தில் அடர்த்தியாக வளர்ந்துள்ள செடி கொடிகளை பொக்லைன் மூலம் ஆகற்றி தூய்மைப்படுத்தினர். சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில், தொடர்ந்து 6 மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மேலும் மாணவனின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை