யுபிஎஸ்சி புதிய தலைவராக முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் நியமனம்..!!

டெல்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 20ம் தேதி அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை இன்று ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைவராக பிரீத்தி சுதன் என்பவரை நியமித்து உள்ளார். முன்னாள் சுகாதாரத் துறை செயலராக பணிபுரிந்த ப்ரீத்தி சுதன். இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ப்ரீத்தி சுதனை யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து அதன் செயலாளர் சசி ரஞ்சன் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ஆக.,1 முதல் அமலுக்கு வருகிறது. 2025 ஏப்.,29 அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!