உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால் புல்டோசரை கொண்டு சுங்கச்சாவடி பூத்களை இடித்த நபர் கைது

லக்னோ: உத்திரபிரதேசத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால் புல்டோசரை கொண்டு சுங்கச்சாவடி பூத்களை இடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹாப்பூர் என்ற பகுதியில் டெல்லி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவியை புல்டோசர் ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சுங்கக்கட்டணம் செலுத்துமாறு புல்டோசர் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் அங்கிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் சுங்கச்சாவடி பூத்களை சேதப்படுத்தினர். சுங்கச்சாவடி ஊழியர்கள் புல்டோசர் தகத்துதலில் இருந்து தப்பித்து ஓரம் நின்றனர். இதையடுத்து ஊழியர்கள் அளித்த புகாரின் அடைப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், புல்டோசரை இயக்கிய ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு