உபி,மணிப்பூர்,குஜராத் என்றால் மவுனம் நீங்க எனக்கு அட்வைசா? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த பெண்கள் உரிமைகளுக்கான பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சந்தேஷ்காளி குறித்து சிலர் பொய் தகவல்களை பரப்பி வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறும் பிரதமர் மோடி மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட போதும், உத்தர பிரதேசத்தில் ஹாத்ராசில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொள்ளப்பட்ட போதும் குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போதும் என்ன செய்து கொண்டு இருந்தார். ஆனால் இங்கு வந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன என்று எங்களுக்கு அறிவுரை செய்கிறார். பாஜ ஆளும் மாநிலங்களில் பெண்கள் சித்திரவதை செய்யப்படும்போது அவர் மவுனம் காக்கின்றார்’ என்றார்.

 

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்