உ.பியில் கங்கை மீது கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்து விபத்து

புலந்த்ஷாஹர்: உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தரபிரதேசம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள புலந்தஷாஹர் நகரையும், அம்ரோஹா பகுதியையும் இணைக்கும் விதமாக கங்கை ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கஜ்ரவுலா கிராமத்தில் கங்கை ஆற்றின் மீதும் இந்த பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பாலத்தின் 3 அடுக்குகள் இடிந்து விழுந்தது. அப்போது பணியாளர்கள், பொதுமக்கள் யாரும் அந்த பகுதியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?