இந்திய ராணுவம் தற்போது பயன்படுத்தும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்: சென்னை எம்.ஐ.டி.யில் தயாரிப்பு

சென்னை: எம்.ஐ.டி. நிறுவன அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி.) மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம், தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வடிவமைத்து ராணுவபயன்பாட்டுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில், சுமார் 500 ஆளில்லா விமானங்களை சென்னை குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. நிறுவனம் தயாரித்து வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆளில்லா விமானங்களை இந்திய ராணுவம் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானங்களை கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும் போதும் பயன்படுத்த முடியும் என்றும், ஒரு கி.மீ. உயரம் வரை சென்று பார்க்கக்கூடிய வகையில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆளில்லா விமானங்களின் எடை சுமார் 100 கிலோ வரை உள்ளது. 15 முதல் 20 கிலோ வரையிலான மருந்து, உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.’’ என்று அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. நிறுவன பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Related posts

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்