பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை; மாணவர் சேர்க்கை, பொது பாடத்திட்டம் குறித்து பேச்சு..!!

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படக்கூடிய 13 பல்கலைக்கழகங்களுடைய துணை வேந்தர்கள், பல்கலைக்கழக பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் நடைபெற்று வரக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வருதல், புதிதாக மாணவர்கள் அதிகம் சேரக்கூடிய பகுதிகளில் கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாட பிரிவுகளில் மேம்படுத்தப்பட்டதாக புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தல், கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது எப்படி? என்பது தொடர்பாக அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 31 மே அன்று இதேபோன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, அரசு பள்ளிகளில் படித்துவரக்கூடிய மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை, ஒற்றை சார்ந்த முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்களையும் அமைச்சர் கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக 2022- 2023, 2023 – 2024 ஆகிய 2 கல்வியாண்டுகளில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், மாணவர் சேர்க்கை விகிதம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

நான் முதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கு எந்த அளவில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவருவதில் இருக்கக்கூடிய சிக்கல்களை எப்படி கலைவது? அதனை எவ்வாறு முறையாக அமல்படுத்துவது? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!