பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை: பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. மே 15 முதல் 29-ம் தேதி வரை பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு’ (கியூட்) மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு சமீபத்தில் நடந்தன.

இத்தேர்வில் பங்கேற்க 3.6 லட்சம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 55 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தேசிய தேர்வு முகமை நேற்று(ஜூலை 27) அறிவித்தது.

அதன்படி பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. கியூட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 250 பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

மாணவியிடம் சில்மிஷம் அரசு டாக்டர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து