பிரபஞ்சத்தில் 20 கருந்துளைகள் இருப்பது மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானல் விஞ்ஞானிகள் மாநாட்டில் தகவல்!!

திண்டுக்கல் : பிரபஞ்சத்தில் 20 கருந்துளைகள் இருப்பது மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் நடைப்பெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளியில் ஏவிய ஆஸ்ட்ரோ சாட் என்ற செயற்கைகோள் மூலம் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி மாணவர்கள் விண்வெளியை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விண்கலத்தின் செயல்பாடு வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், இன்னும் 10 ஆண்டுகள் அது சிறப்பாக செயல்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபஞ்சத்தில் ஏற்பட்டு வரும் கருந்துளைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்ட ஆஸ்ட்ரோ சாட் செயற்கைகோள் மூலம் இதுவரை 80 கருந்துளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 20 கருந்துளைகள் இருப்பது மட்டும் தான் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கொடைக்கானலில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் கருந்துளை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் என 90த்திற்கும் மேற்பட்டோர் தங்கள் ஆய்வுகளை முன் வைத்து விவாதங்களில் ஈடுபட்டனர்.

ஆஸ்ட்ரோ சாட் போலவே தற்போது விண்வெளி ஆராய்ச்சிக்காக இன்சிஸ்ட் என்ற செயற்கைகோள் உருவாக்கப்பட்டு இஸ்ரோ ஒப்புதலுக்காக காத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்சிஸ்ட் விண்கலத்தின் மூலம் மிகவும் துல்லியமான தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், நாட்டின் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்