ஒற்றுமை இந்தியா கருத்துடன் காங். நிற்கிறது; நாட்டை துண்டாடும் கருத்துடன் நிற்கிறது பாஜக!: பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி பேச்சு

பாட்னா: இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும் முன் பாட்னாவில் காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல்காந்தி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக இந்தியாவில் இரண்டு வகையான எண்ண ஓட்டங்கள் இப்பொது இருக்கின்றன.

ஒன்று இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவோம் என்ற காங்கிரசின் எண்ண ஓட்டம். மற்றொன்று பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆகியோரின் பாரதத்தை துண்டாடுவோம் என்கின்ற எண்ண ஓட்டம். நீங்கள் எங்களுடைய இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவோம் பாதையாத்திரையின் போது மிகுந்த உதவி செய்தீர்கள். நான் எங்கு சென்றாலும் அது தமிழ்நாடாக இருக்கட்டும், கேரளவாக இருக்கட்டும், அல்லது தெலுங்கானாவாக இருக்கட்டும் அங்கு பீகாரில் இருந்து வந்திருந்தவர்கள் என்னுடைய பாதை யாத்திரையில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பீகார் மக்கள் எங்களுடைய இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவோம் என்ற எண்ண ஓட்டத்தை நன்றாக புரிந்துக் கொள்கிறீர்கள்.

பாஜக நாட்டை மக்களை பிரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. வெறுப்புணர்ச்சியை வெறுப்புணர்ச்சியால் வெல்ல முடியாது. வெறுப்புணர்ச்சியை அன்பால் தான் வெல்ல முடியும். நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு வந்துள்ளனர். ஒன்றாக இணைந்து பிஜேபியை தோற்கடிக்க நாங்கள் முயன்று வருகிறோம். தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்,ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம். 4 மாநில தேர்தல்களில் பாஜக எங்குள்ளது எனத் தெரியாத வகையில் துடைத்தெறியப்படும். பீகார் மக்களும் பாஜகவின் எண்ணம் அறிந்து செயல்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!