யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 அசிஸ்டென்ட்கள்

பணி: Assistant. மொத்த காலியிடங்கள்: 300.
சம்பளம்: ₹22,405- 62,265.
வயது: 30.09.2023 தேதியின்படி 21 முதல் 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உள்ளூர் மொழி திறனறி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத்தேர்வில் தலா 50 மதிப்பெண்களுக்கு Test of Reasoning, Test of English Language, Test of Numerical Ability, Test of General Awarness, Computer Knowledge ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 250 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

சென்னை, கோவை, தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கு பின் நிரந்தர பணி வழங்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசினருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.uiic.co.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.01.2024.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு