சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு திருமாவளவன் கடிதம்

சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் அண்மையில் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொள்கின்றன. இந்த மாவட்டங்களில் ஒரே நாளில் 60 முதல் 100 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது. ஒன்றிய அரசின் உடனடித் தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்டிஆர்எப் பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது. மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு