விவசாயிகளை ஏமாற்றிய ஒன்றிய அரசின் பட்ஜெட்: பிஆர்.பாண்டியன்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் நாகப்பட்டினத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசுடைய பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. இதில் குறிப்பாக லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் விவசாயிகள் உற்பத்தி சந்தைபடுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். உரத்திற்கான பயன்பாட்டை குறைக்க வேண்டும், பாரம்பரிய வேளாண் முறைக்கு இயற்கை உர உற்பத்தியை ஊக்கப்படுத்த நினைக்கிறதே தவிர, உர உற்பத்திக்கு தேவையான மானியங்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்