1.90 கோடி பேர் வாக்களிக்காததற்கு ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான் காரணம்: பிரேமலதா அறிக்கை

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 1.90 கோடி பேர் வாக்களிக்காததற்கு அதிக வெயில் என்பது காரணமல்ல. ஏனெனில் தேர்தல் வழக்கமாக கோடை காலத்தில் தான் வருகிறது. எனவே வெயிலின் தாக்கம் காரணம் என்பதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதுதான் காரணம். தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்களிக்க விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடியில் இருப்பவர்கள் வாக்களிப்பதை விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது. எனவே தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதின் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்