ஒன்றிய மின்னணு நிறுவனத்தில் அதிகாரிகள் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்்சகத்தின் கீழ் உள்ள ஒன்றிய மின்னணு நிறுவனத்தில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பி.இ.,/பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Sr. Manager (HR)/ Manager (HR):
2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: பட்டப்படிப்புடன் பெர்சனல் மேனேஜ்மென்ட்/மனித வள நிர்வாகம் ஆகிய படிப்புகளில் எம்பிஏ/முதுநிலை டிப்ளமோ அல்லது தொழிலாளர் நலன்/ தொழில் உறவுகள்/ சமூக பணி ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் 2 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ.
2. Assistant Technical Manager (Microwave): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி; எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., தேர்ச்சி.
3. Assistant Technical Manager (SPD): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
4. Deputy Engineer (SPD): 4 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி அல்லது எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ இன்டகரேட்டட் எம்பெடட் சிஸ்டம்ஸ் ஆகிய பாடங்களில் எம்.இ.,/எம்.,டெக் தேர்ச்சி.

5. Deputy Engineer (Microwave): 2 இடங்கள்: (பொது-1, எஸ்டி-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் மற்றும் டெலி கம்யூனிகேசன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., அல்லது சம்பந்தப்பட்ட பாடங்களில் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி.

6. Deputy Engineer (MED):1 இடம் (எஸ்சி): தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்.,
7. Deputy Engineer (Civil): 2 இடங்கள்(பொது-1, ஒபிசி-1): தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 55% மதிப்பெண் தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
8. Deputy Engineer (SSG): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேசன்/கம்ப்யூட்டர்ஸ்/ எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.9. Deputy Engineer (IT): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.

10. Deputy Engineer :(MED): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: Metallurgy/Material Science/ Ceramic Engineering ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி அல்லது எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி.
11. Graduate Engineer Trainee: (Mechanical): 3 இடங்கள் (பொது). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்.,
12. Graduate Engineer Trainee (Metallurgy/Materials Science/Ceramic):4 இடங்கள் (பொது). தகுதி: Metallurgy/Materials Science/Ceramic Engineering ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
13. Graduate Engineer Trainee (ECE): 1 இடம் (பொது). தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.celindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.07.2024.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு