ஒன்றிய அரசுக்கு எதிராக வழக்கு டிவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: டிவிட்டரில் 2021ம் ஆண்டு பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை வெளியிட்ட பல்வேறு டிவிட்களை நீக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. 1,474 டிவிட்டர் கணக்குகள், 175 டிவீட்கள், 256 யூஆர்எல்கள் மற்றும் ஒரு ஹேஷ்டேக்கை தடுக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதி கிருஷ்ண எஸ் தீட்சித் மனுவை விசாரித்தார். அப்போது மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட அவர், டிவிட்டர் நிறுவனத்திற்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தொகையை 45 நாட்களுக்குள் கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். 45 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், ஒரு நாளைக்கு ரூ. 5,000 கூடுதல் வரி விதிக்கப்படும். ஏனெனில் டிவிட்களை தடுக்கவும், டிவிட்டர் கணக்குகளை முடக்கவும் ஒன்றிய அரசின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். டிவிட்டர் கணக்குகளை முடக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை நான் உறுதியாக நம்புகிறேன். என்று நீதிபதி தெரிவித்தார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!