ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 146 இடங்கள்

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 146 இடங்களுக்கு ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Research Officer (Naturopathy): 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: Naturopathy மற்றும் Yogic Science ல் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நேச்சுரோபதியில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி.
2. Research Officer (Yoga): 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: யோகா பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி.
3. Assistant Director (Regulations & Information): 16 இடங்கள் (எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-8). வயது: 40க்குள். தகுதி: Law பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம்.
4. Assistant Director (Forensic Audit): 1 இடம் (எஸ்சி). வயது: 35க்குள். தகுதி: CA/ICWA தேர்ச்சி அல்லது Business Administration/Commerce/Businesss Economics பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி அல்லது சட்டப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
5. Public Prosecutor: 48 இடங்கள் (பொது-20, எஸ்சி-8, எஸ்டி-5, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 35க்குள். தகுதி: சட்டம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம்.
6. Junior Engineer (Civil): 58 இடங்கள் (எஸ்சி-10, பொது-26, எஸ்டி-4, ஒபிசி-13, பொருளாதார பிற்பட்டோர்-5). வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
7. Junior Engineer (Electrical): 20 இடங்கள் (எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-10). வயது: 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி.
8. Assistant Architect: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: Architecture பாடத்தில் இளநிலைப் பட்டபடிப்பு தேர்ச்சி.

சம்பளம்: மேற்குறிப்பிட்ட அனைத்துப் பணிகளுக்கும் 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.25/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

https://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.4.2023

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்