சண்டிகரில் விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அரசு இன்று மாலை 5-ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தும் என தகவல்

டெல்லி: 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கடந்த ஒருவாரமாக குவிந்துள்ளனர்.

விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தீவிரமடைகிறது. டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கினர். டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. டெல்லி சம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை பற்றி பேசலாம் என அமைச்சர் அர்ஜூன் முண்டா அழைப்பு விடுத்தார். இந்நிலையில் சண்டிகரில் விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அரசு இன்று மாலை 5-ம் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் இன்று மாலை சண்டிகர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்