ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.1.17லட்சம் கோடியை எப்படி செலவழித்தீர்கள்? அறிக்கை கேட்டு முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1.17லட்சம் கோடி நிதி எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.  மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒன்றிய அரசுஒதுக்கிய நிதியை அரசின் திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன் அடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் எழுதிய கடிதத்தில், ‘‘2023-2024ம் நிதியாண்டில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ரூ.1.17லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது அரசின் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெளிப்படை தன்மையை உறுதி செய்து சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி