ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது போலீசில் காங்கிரஸ் புகார்

மைசூரு: மைசூரு மாநகர வளர்ச்சி வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதற்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜ-மஜத கட்சியினர் பெங்களூருவில் இருந்து மைசூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.

மைசூருவில் ஆக. 10ம் தேதி நடந்த மாநாட்டில் பேசிய ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி, பெங்களூரின் ஜேடரஹள்ளி சாலையில் இருக்கும் பாதாளசாக்கடை மேல்ஹோல்களின் மூடிகளை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திருடி காயலான் கடையில் விற்பனை செய்து வந்தார் என பேசினார். இதை எதிர்த்து மைசூரு நகர காங்கிரசார் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related posts

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி