ஒன்றிய அரசிடம் பேரிடருக்கான நிதியை மட்டுமே கேட்டேன்; தவறான வார்த்தை எதுவும் பேசவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஒன்றிய அரசிடம் பேரிடருக்கான நிதியை மட்டுமே கேட்டேன்; தவறான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

“நிதியைத்தான் கேட்டேன்; தவறாக எதுவும் பேசவில்லை”
ஒன்றிய அரசிடம் பேரிடருக்கான நிதியை மட்டுமே கேட்டேன்; தவறான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அரசு எட்டியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

“பேரிடர் கால பணியை அரசியலாக்க நிர்மலா முயற்சி”
பேரிடர் கால நடவடிக்கைகளை அரசியலாக்க முயற்சிக்கிறார் நிர்மலா சீதாராமன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் அடைந்த பெரிய பாதிப்பை உணர்ந்து ஒன்றிய அரசு கூடுதல் நிதி தர வேண்டும். அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். மரியாதைக் குறைவான வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.

“ஏரல் பகுதியில் முழுவீச்சில் மீட்பு, நிவாரணப் பணி”
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பேரூராட்சி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஏரல் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

“மோடி அரசின் 9.5 ஆண்டு ஆட்சி பேரிடர் என விமர்சனம்”
மோடி அரசின் 9.5 ஆண்டு கால ஆட்சியே பேரிடர் என சமூக வலைதளத்தில் விமர்சனத்தை பார்த்தேன் என்றும், வார்த்தைக்கு வார்த்தை பேசி நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி அரசியலாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இணையவழியில் கட்டிட அனுமதி வழங்குவதற்கான கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

27ம் தேதி முதல் முதுநிலை கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு