ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது. அதேநாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுநாள் ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

ஒன்றிய அரசின் பரிந்துரைப்படி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 – 25ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மூன்றாவது முறையாகவும், தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பாட்ஜெட் இதுவாகும். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!