ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு போலீசார் முடிவு!!

பெங்களூரு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பெங்களூரு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், நடவடிக்கை எடுக்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க பெங்களூருவில் உள்ள மக்கள் பிரிதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற திட்டமிட்டுள்ள பெங்களூரு போலீசார் நீதிமன்றத்தின் அனுமதி பெறுவதற்காக விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

Related posts

கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது : திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைப்பு

சிவாஜி கணேசன் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர்