ஒன்றிய பாஜ அரசு ரயில்களுக்கு பெயின்ட் அடிச்சு புதுகொள்ளை: மெல்ல மெல்ல வாயை திறக்கும் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள வயலூரில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
பாஜ மதவாத கட்சி, மதவெறி பிடித்த கட்சி என்பதால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தமிழகம் வரும் மோடி ரயில் நிலையங்களை புதுப்பித்து கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நவீனப்படுத்துவதாக கூறுகிறார்.

ஆனால், ஏற்கனவே இருந்த ரயில்களை பெயிண்ட் அடித்து நிறம், பெயர்களை மாற்றியும், வடிவத்தை மாற்றியும் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். ₹500 கட்டணத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை சென்று வந்த நிலை மாறி தற்போது ₹3,000 செலவு செய்து டிக்கெட் எடுத்து ரயிலில் சென்னை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத், தேஜஸ், மெட்ரோ என ரயில்களுக்கு பெயர் வைத்து இந்தியா முழுவதும் புதுவகையான கொள்ளையில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து நாள்தோறும் மோடி விளம்பரம் செய்கிறார். இவ்வாறு கூறினார்.

என்னா உருட்டு உருட்டுறாரு…
‘எடப்பாடி பழனிச்சாமி தெய்வத்தின் அருளால் முதலமைச்சராக தேர்வானார். எடப்பாடி பழனிச்சாமி ஏழையின் பங்காளன். ஏழைகளுக்காக கண்ணீர் விடுபவர். எம்ஜிஆருக்கு இணையானவர். ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பிடுங்கி விடுவேன் என பேசுகிறார். யார் பதவியை யார் புடுங்குவது? தெய்வத்தின் அமைப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. கட்சியை உடைக்கலாம், எடப்பாடியாரையும், எங்களையும் பிரித்து விடலாம் என நினைத்தார்கள், ஆனால் அவை அனைத்தும் முடியாமல் போனது,’என்றார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு