ஆகஸ்ட் 1ம் தேதி அமலாகிறது ராணுவ அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை

புதுடெல்லி: பிரிகேடியர்கள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுவான சீருடை வரும் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய ராணுவத்தில் பல்வேறு வகையான ஆயுத படைப்பிரிவுகள், சேவைப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் உள்ளிட்ட பிரிகேடியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வெவ்வேறு விதமான சீருடைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் உயர் அதிகாரிகளுக்கு பொதுவான சீருடை வழங்குவது தொடர்பான ஆலோசனை நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பிரிகேடியர் மற்றும் உயர் பதவியில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரே மாதிரியான பொதுவான சீருடை அமல்படுத்தப்படுவதாக ராணுவ வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. தொப்பி, தோள்பட்டை ரேங்க் பேட்ஜ்கள், சட்டை காலர் பேட்ஜ்கள், பெல்ட்கள் மற்றும் காலணிகள் ஆகியவை இனி பொதுவானதாக இருக்கும். கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. ‘‘இது இந்திய ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளை பிரதிபலிக்கும். ராணுவத்தை நியாயமான மற்றும் சமமான அமைப்பாக வலுப்படுத்தும்” என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்