மாணவர்கள் மோதலுக்கு வேலையின்மை காரணமாம்: அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பு, பாஜவினர் அதிர்ச்சி

நெல்லை: நாங்குநேரியில் நடந்த மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு வேலைவாய்ப்பு இல்லாததே காரணம் என்று அண்ணாமலை கூறியது பாஜவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: அரசியலில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன் நான். நீட் தேர்வில் பழங்குடி மாணவர்கள் கூட வெற்றி பெறுகிறார்கள். சாமானிய குடும்பத்து மாணவர்களும் வெற்றி பெற்று வருகிறார்கள். நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தென்தமிழகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நாங்குநேரி மாணவர் மோதல் சம்பவத்திற்கு வேலைவாய்ப்பு இல்லாதது தான் முக்கிய காரணம். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்துவிட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அதிகமான வேலைவாய்ப்புக்களை உருவாக்க தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விதிப்பில் விலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் கந்துவட்டி, சாதி மோதல்களுக்கு முடிவு பிறக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவோம் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால், இதை நிறைவேற்றவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மோதலுக்கு வேலைவாய்ப்பின்மைதான் காரணம் என்று அண்ணாமலை கூறியதை கேட்டு பிரதமரை தான் இவர் விமர்சிக்கிறாரா என பாஜவினர் அதிர்ச்சியடைந்தனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்