பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: ஈரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை முறையாக மூடாததால் லாரி சிக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக சாலையின் குறுக்கே குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்தது.

இதில், சாலையின் ஒரு புறம் குழாய் பதிக்கப்பட்டு குழி மூடப்பட்டது.மறுபுறம் குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக தார் மற்றும் ஜல்லி கலவையை ஏற்றிச்சென்ற லாரி முறையாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் சிக்கி நின்றது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த தார், ஜல்லி கலவை மற்றொரு டிராக்டர் வரவழைக்கப்பட்டு, அதில் ஏற்றப்பட்டது. பின்னர், லாரி மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு