கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்திற்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது. பண்டைய தமிழர்களின் புகழினை, பறை சாற்றுகின்ற வகையிலும், உலக நாடுகள் வியக்கின்ற வகையிலும் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை காண தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி வரும் கீழடி அருங்காட்சியகத்திற்கு, சுற்றுலா, பண்பாடு(ம) அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், கீழடி அருங்காட்சியகத்திலும் பின்பற்றப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமைதோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களான ஜன.26 குடியரசு தினம், ஆக.15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்