இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுக் குழு அறிவிப்பு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உ;ள்ளதாக தமிழ்நாடு மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தரவரிசைப் பட்டியல் கடந்த வாரம் வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 40,200 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை காலை 10 முதல் வரும் 31ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் நடைபெற உள்ளது.

www.tnmedicalselection.org என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி நடைபெறும் எனவும் மருத்துவ தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்