கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பானின் விளக்க கடிதம் ஏற்பு: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வெளிநாட்டில் பரிசோதனை செய்து பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்க உள்ள குழந்தையின் பாலினம் குறித்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் கடந்த மே 21ம் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சை, விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது, அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மறைமுகமாக இதனை செய்யும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இர்பான் வெளியிட்ட வீடியோவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் இர்பானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை சார்பில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறை காவல்துறையிடம் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில் சமூக வலைத்தளத்திலிருந்து வீடியோவை இர்பான் நீக்கினார். இச்சம்பவம் குறித்து யூடியூபர் இர்பான் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். மேலும் மன்னிப்பு கோரி வீடியோ பதிவு செய்து வெளியிடுகிறேன் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதனை தொடர்ந்து குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை