ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும்: இங்கிலாந்து வலியுறுத்தல்

லண்டன்: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் ​​ஸ்டார்மர் கலந்து கொண்டு பேசும் போது,’ இந்தியா, ஆப்பிரிக்கா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி நாடுகளுக்கு நிரந்தரப் பிரதிநிதித்துவத்தைத் தவிர, பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இது பொருந்தும்.

அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக, அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக அது மாற வேண்டும். எனவே பாதுகாப்பு கவுன்சிலில் பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும். அதேபோல் நிரந்தர ஆப்பிரிக்க பிரதிநிதித்துவத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்’ என்றார்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது