ஐ.நா. புள்ளியியல் ஆணையத் தேர்தலில் 46 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி… 4 ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பை வகிக்கும்!!

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பாண்மையுடன் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் இந்தியா 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியா 23 வாக்குகளும் சீனா 19 வாக்குகளும் ஐக்கிய அரபு அமீரகம் 15 வாக்குகளும் பெற்றுள்ளன. இந்த வெற்றியின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஐ.நா. புள்ளியியல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கக் உள்ளது. தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இரண்டாவது வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மீதமுள்ள ஆசிய பசிபிக் மாநிலங்களின் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில், “2024 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி 4 ஆண்டு காலத்திற்கான மிக உயர்ந்த ஐநா புள்ளியியல் அமைப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது..போட்டித் தேர்தலில் மிகவும் வலுவாக வெற்றிபெற்றதற்காக, இந்திய யு.என்.நியுயார்க் (IndiaUNNewYork) அணிக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்