ஐ.நா. ஒரு பழங்கால அமைப்பு.. சமகால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் செயல்படவில்லை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!

டெல்லி: சமகால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட முடியாத ஐ.நா. அமைப்பு ஒரு பழங்கால நிறுவனம் என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் அவரிடம் சர்வதேச புவி அரசியலில் ஐ.நா.வின் பங்கு, அமெரிக்க அதிபர் தேர்தல், பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு சமகால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியாத ஐ.நா. அமைப்பு ஒரு பழைய நிறுவனம் போன்றது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் என பல தரப்பினரும் புதிய மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவும், ஆனால் ஐ.நா. அதே பழைய அமைப்பாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். முக்கிய விவகாரங்களில் தலையிடாமல் ஐ.நா.விலகி கொள்ளும்போது ஒவ்வொரு நாடும் அவர்களுக்கான தீர்வை தனியே தேடி கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

Related posts

மெரினாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்: எல்.முருகன் பேட்டி

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை கிண்டலடித்த செல்லூர் ராஜூ

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது