உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு: ஒருவர் பலி, குழந்தைகள் படுகாயம்

ஒடேசா: உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்தனர். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருங்கடல் நகரமான ஒடேசா மீது நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அங்குள்ள பாரம்பரிய தளங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளை ஏவியது. இதில் பாரம்பரியமான டிரான்ஸ்பிகுரேஷன் கதீட்ரல் தேவாலாயத்தையும் ஏவுகணை விட்டு வைக்கவில்லை. குண்டுவீச்சில் இந்த தேவாலாயம் கடுமையாக சேதமடைந்தது.

மொத்தம் 25 பாரம்பரிய அடையாளங்களை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணை வீசி உள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 4 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இடிந்த போன தேவாலயத்தில் இருந்து புனித பொருட்களையும், ஆவணங்களையும் மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ‘உக்ரைனின் பாரம்பரியம் இப்போது எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது’ என மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ‘ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி விடும் தளங்களை குறிவைத்து தாக்கி உள்ளோம்’ என கூறி உள்ளது.

Related posts

இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை