உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகளால் பெருந்தாக்குதல்

கிவ்: உக்ரைன் மீது காலையில் தொடங்கி, ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணைகளை வீசி வருகிறது. ஸபோரிஸியா, கிரெமன்சுக், நிப்ரோ, கெமல்னிட்ஸ்கி, ஒடெசா, வினிட்சியா நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கிராப்பிவினிட்ஸ்கி, கிரைவி நகரங்களிலும் ஏவுகணைகளின் வெடிச் சப்தம் கேட்டதாக கீவ் இன்டிப்பென்டென்ட் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய குண்டுவீச்சால் மின் விநியோகம், குடிநீர் விநியோம் பாதிக்கப்பட்டதாக நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக ஞாயிறு இரவு உக்ரைன் படைகள் ரஷ்யாவின் பெல்கோராட் மீது நடத்திய தாக்குதலில் 5 ரஷ்யர்கள் பலியானார்கள்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்