உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் நவீன போர் விமானம் சேதம்

கீவ்: உக்ரைன்-ரஷ்யா போர் 2 ஆண்டுகளையும் தாண்டி நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அதி நவீன எஸ்யு-57 ரக போர் விமானத்தை குறி வைத்து உக்ரைன் நேற்றுமுன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த விமானம் பலத்த சேதமடைந்துள்ளது. இது தொடர்பான செயற்கை கோள் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் எல்லையை ஒட்டிய ஆஸ்திராகான் மாகாணத்தில் அக்துபின்ஸ்க் விமான தளம் அமைந்துள்ளது. இதில் நேற்றுமுன்தினம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது உக்ரைனின் எல்லையில் இருந்து 589 கிமீ தொலைவில் உள்ளதால் டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை