மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: கட்டிடங்கள், வாகனங்கள் சேதம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. உக்ரைன், ரஷ்ய போர் 18 மாதங்களாக நீடிக்கிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தகுந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மேற்கு புறநகர் பகுதியில் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது.

இதில் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. சில பகுதிகளில் ரஷ்யா விமானப்படையினர் உக்ரைனின் டிரோன்களை இடைமறித்து அழித்தனர்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது