நெட் பாடத்திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு

புதுடெல்லி: உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் ஆகியவற்றுக்கான யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 83 பாடப்பிரிவுகளில் நடத்தப்படும். கடைசியாக 2017ம் ஆண்டு இதற்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் விரைவில் மீண்டும் பாடத்திட்டம் திருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ யுஜிசி-நெட் பாடத்திட்டங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும். புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தும் முன்பாக தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படும்’’ என்றார்.

Related posts

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி; கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு