உத்தவ் தாக்கரே பிறந்தநாள் ராகுல், அகிலேஷ் வாழ்த்து

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா(உத்தவ்) கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே நேற்று தனது 64 வது பிறந்தநாளை கொண்டாடினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிடுகையில், ‘மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு இந்தியரின் நீதிக்கான போராட்டத்திற்காகவும் இணைந்து செயல்படுவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிடுகையில், ‘மகாராஷ்டிராவின் பிரபலமான முதல்வரான உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மகாராஷ்டிராவின் பெருமை மற்றும் முன்னேற்றத்துக்காகவும் நீங்கள் தொடர்ந்து தீவிரமாக செயல்படுங்கள்.மகாராஷ்டிரா மற்றும் அதன் பொருளாதாரத்தின் கண்ணியம், அடையாளம், நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களின் சதிகளை முறியடிக்க உங்களுடைய பலம் பெருகட்டும்.எதிர்மறை அரசியலில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக நமது பரஸ்பர ஒத்துழைப்பு வளரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி