துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திண்டுக்கல் : உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதல்வராக பதவியேற்றத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழ்நாடு துணை முதல்வராக நேற்று உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதனை திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடினர். பழநியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நகர செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பழநி அருகே புளியம்பட்டியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். புளியம்பட்டி கிளை செயலாளர் கண்ணுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுலோச்சனா சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* குஜிலியம்பாறையில் வடக்கு, தெற்கு ஒன்றிய மற்றும் பாளையம் பேரூர் திமுக சார்பில், ஒன்றிய சேர்மன் சீனிவாசன் தலைமையில் கொண்டாடினர். பாளையம் பேரூர் செயலாளர் கதிரவன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சசிராஜலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரத்தில் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் கொண்டாடினர். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் முன்னாள் எம்எல்ஏவும் மாநில செயற்குழு உறுப்பினருமான ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, தர்மராஜன் உட்பட கலந்து கொண்டனர்.< கொடைரோட்டில் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் ஒன்றியச்செயலாளர் கரிகாலபாண்டியன் தலைமையில் கொண்டாடினர். பட்டிவீரன்பட்டி திமுக நகர செயலாளர் அருண்குமார் தலைமையில் திமுகவினர் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

* திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன் தலைமையில் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், திண்டுக்கல் மாநகர அவைத் தலைவர் முகமது இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டுவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கேபி.முருகன் தலைமையில் கொண்டாடினர்.

Related posts

அரியானா கொள்ளையர்கள் 5 பேரையும் திருச்சூர் போலீசார் காவலில் எடுக்க முடிவு: 3 ஸ்டேஷன்களில் தனித்தனி வழக்குகள் பதிவு

தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்: திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம். ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்