உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து..!!

நீலகிரி: உதகையில் நாளை நடக்க இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீலகிரி மக்களவை தொகுதியை பொறுத்தவரை பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக அதிமுக, பாஜக, திமுக ஆகிய 3 கட்சிகளும் நேரடியாக போட்டியிடுகின்றன. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு நட்சத்திர பேச்சாளர்களும், அரசியல் தலைவர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

தேர்தல் பரப்புரை நிறைவு பெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது நீலகிரியில் பிரச்சாரமானது சூடுபிடித்துள்ளது. அதை தொடர்ந்து பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜே.பி.நட்டா உதகையில் நாளை ரோடு ஷோ நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ரத்தாகும் பா.ஜ.க. தலைவர்களின் ரோடு ஷோவால் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

 

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்