சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் தராமல் ஓட்டல் ஊழியரை சரமாரி தாக்கிய இருவர் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே ஓட்டலில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் தராத தகராறில், ஊழியரை சரமாரி தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் ஜிஎஸ்டி சாலை கடப்பேரி பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வந்த 2 பேர், பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்.

இதனால் ஓட்டல் ஊழியர் சங்கர், சாப்பிட்ட பிரி யாணிக்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். அதன்படி அவர்கள் சங்கரிடம் பணத்தை கொடுத்து விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் வந்த கும்பல், ஊழியர் சங்கரை தகாதவார்த்தைகளால் திட்டி கடையில் இருந்த நாற்காலியை அடித்துஉடைத்து அவரை சரமாரி தாக்கிவிட்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த சங்கரை சக ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் சகிலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய கும்பலை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று தாம்பரம் சானடோரியம் பகுதியில் தலைமறைவாக இருந்த கருப்பு (எ) வெங்கடேஷ் (26) மற்றும் கடப்பேரி பகுதியில் தலைமறைவாக இருந்த சுரேஷ் உதயா (எ) உதயா (24) ஆகியோரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி