இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: தமிழக பாஜ செயலாளர் அஸ்வத்தாமனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக பாஜ செயலாளர் அஸ்வத்தாமன், ஜூலை 7ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற, தமிழக சிவ சேனாவின் முன்னாள் தலைவர் தங்க முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாளின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சு பேசியதாக நாகூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அஸ்வத்தாமன் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜாரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நிபந்தனையுடன் அஸ்வத்தாமனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 4 வெள்ளிக்கிழமைகளில் நாகூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கும்போது வெறுப்பு பேச்சு பேசமாட்டேன் என்ற உத்தரவாதத்தை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து