ஆந்திராவிலிருந்து செம்மண் கடத்திய இருவர் கைது

பள்ளிப்பட்டு: ஆந்திராவிலிருந்து செம்மண் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திர எல்லைப் பகுதியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு அனுமதியின்றி அதிக அளவில் செம்மண் கடத்தப்படுவதாக திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ்க்கு ரகசிய தகவலின் பேரில், டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன் தினம் இரவு பாலாபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆந்திராவிலிருந்து செம்மண் கடத்தி வந்த லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மகன்காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(31), ஆர்.ஜெ.கண்டிகை சேர்ந்த சஞ்சய்(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!