மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் உள்பட இருவர் பிடிபட்டனர்:ரூ.1 லட்சம் கோகைன் பறிமுதல்

பல்லாவரம்: சென்னை அருகே கல்லூரி மாணவர்களுக்கு, கோகைன் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரிய வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, ஒரு கும்பல் கோ கைன்போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக, நேற்று முன்தினம் தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நைஜீரியா நாட்டு வாலிபர் மூலம், குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோகைன் போதைப்பொருள் விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து நேற்று குன்றத்தூர் வந்த நைஜீரிய வாலிபர் ஆரோன் பெல் (30) என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், பெங்களூருவில் இருந்து கோகைன் போதைப்பொருளை மொத்தமாக கடத்தி வந்து, அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக பிரித்து, குன்றத்தூரில் இருக்கும் சாமுவேல் மூலமாக, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குன்றத்தூர் வீட்டில் பதுங்கியிருந்த சாமுவேலையும் போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்துரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 கிராம் கோ கைன்போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட ஆரோன் பெல், சாமுவேல் ஆகிய 2 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மாதவரத்தில் உள்ள ஆந்திரா பேருந்து நிறுத்த பகுதியில் நேற்று காலை சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை, போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் அலி (25) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சபீர் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை

குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள்