சிவகிரி அருகே சின்ன ஆவுடையப்பேரி குளத்தில் மண் கடத்திய இருவர் கைது: டிராக்டர், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்


சிவகிரி: சிவகிரி அருகே சின்ன ஆவுடையப்பேரி குளத்தில் மண் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டர், பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகிரி அருகே அருகன்குளம் தேவர் சிலைக்கு மேற்கே உள்ள சின்னஆவுடையப்பேரிகுளத்தில் மண் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. மண் கடத்தலை தடுக்க கோரி வருகிற 9ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தென்காசி மாவட்ட எஸ்பி சாம்சன் உத்தரவின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி அசோக்குமார் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு மண் கடத்தலை தடுத்து வந்தனர். இந்நிலையில் குளத்தில் சிலர் அனுமதியின்றி மண் எடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து டிராக்டரில் கடத்திய அருகன்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் வைரமுத்து (44), பந்தபுளி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சமுத்திரம் மகன் பரமசிவம் (38) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து டிராக்டர், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் ஜேசிபி உரிமையாளர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது