டூவீலர்கள் விற்பனை

கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில் டூவீலர்கள் விற்பனை இரட்டை இலக்கத்தை தாண்டியது. மொத்தம் 49.8 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. இதில் ஸ்கூட்டர் விற்பனை மொத்தம் 16.6 லட்சம் விற்பனையாகி, 33 சதவீத சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ளது. பைக்குகள் விற்பனை 31.9 லட்சம். ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் 7,94,835 விற்பனையுடன் முதலிடத்திலும், டிவிஎஸ் 3,86,633 விற்பனையுடன் இரண்டாம் இடத்திலும், சுசூகி மோட்டார் 2,46,264 விற்பனையுடன் 3ம் இடத்திலும் உள்ளன. அடுத்த இடங்களில் ஹீரோ மோட்டார் , யமஹா, பஜாஜ் ஆட்டோ உள்ளன என நிறுவன புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்