சித்தூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ₹135 அபராதம்-போக்குவரத்து போலீசார் அதிரடி

சித்தூர் : சித்தூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அதிரடியாக ₹135 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
சித்தூர் மாநகரத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து போலீசார் விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இருப்பினும் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

எனவே, சித்தூர் மாநகராட்சி போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தனி கவனம் செலுத்தி அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு மற்றும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முதல் சித்தூர்- பலமனேர் தேசிய நெடுஞ்சாலையில் தர்கா சர்க்கிள் அருகே போக்குவரத்து காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அவ்வழியாக அதி வேகமாக வரும் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகிறார்கள்.

அதன்படி, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ₹135ம். லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு ₹250ம், வாகன சான்றிதழ்கள் இல்லாத வரும் வாகனங்களுக்கு ₹500ம் அபராதம் விதித்து வருகிறார்கள். இதுகுறித்து போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாபு தெரிவிக்கையில், சித்தூர் மாநகரத்தில் அதிக அளவு இருசக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட எஸ்பி ரிஷாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் ஹெல்மெட் அணியாத, லைசென்ஸ் இல்லாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறோம்.

ஏராளமான இளைஞர்கள் புதியதாக இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டு வருகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அதேபோல் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்துக்களை கட்டுப்படுத்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்த நாங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறோம். இனியாவது இருசக்கர வாகன ஓட்டிகள் உறிய ஆவணங்கள் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும்.

மேலும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். நேற்று ஒரு நாள் மட்டும் உறிய ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமல் வந்த 278 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலா ₹135, ₹250, ₹500 என அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி